< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
பிரதோஷத்தையொட்டி பரமத்திவேலூர் சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை
|24 Sept 2022 12:18 AM IST
பிரதோஷத்தையொட்டி பரமத்திவேலூர் சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி நேற்று சிவன் மற்றும் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதன்படி பரமத்திவேலூர் அருகே பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் மற்றும் பரமத்திவேலூர் வல்லப விநாயகர் கோயிலில் உள்ள விசாலாட்சி சமேத பானலிங்க விஸ்வேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் எழுந்தருளியுள்ள சிவன், நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.