< Back
மாநில செய்திகள்
ஆடி கழுவாடியையொட்டி  சிங்கார கருப்பண்ண சாமி கோவிலில் முப்பூஜை விழா
நாமக்கல்
மாநில செய்திகள்

ஆடி கழுவாடியையொட்டி சிங்கார கருப்பண்ண சாமி கோவிலில் முப்பூஜை விழா

தினத்தந்தி
|
15 Aug 2022 5:50 PM GMT

ஆடி கழுவாடியையொட்டி சிங்கார கருப்பண்ண சாமி கோவிலில் முப்பூஜை விழா

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் காவிரி கரையில் உள்ள பிரசித்தி பெற்ற சிங்கார கருப்பண்ண சாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத கழுவாடியில் முப்பூஜை விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு ஆடி கழுவாடியையொட்டி சிங்கார கருப்பண்ண சாமிக்கு 13 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை, ஆடு மற்றும் கோழிகள் பலியிடப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வேலூர் கொங்கலம்மன் கோவிலில் 12-ம் ஆண்டு பால்குட அபிஷேக விழா நடைபெற்றது. நேற்று காலை பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி பால்குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கொங்கலம்மன் கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்