< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
ஆடிப்பெருக்கையொட்டி ஆத்துக்கொட்டாய் பத்ரகாளி அம்மன் கோவிலில் கங்கா பூஜை
|3 Aug 2022 10:34 PM IST
ஆடிப்பெருக்கையொட்டி ஆத்துக்கொட்டாய் பத்ரகாளி அம்மன் கோவிலில் கங்கா பூஜை
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே ஆத்துக்கொட்டாய் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கையொட்டி ஆத்துக்கொட்டாய், பொப்பிடி, சென்னப்பன் கொட்டாய், செம்மனஅள்ளி, பெலமாரனஅள்ளி, ஆமேதன அள்ளி, சீரியம்பட்டி ஆகிய 7 கிராம மக்கள் ஆத்துக்கொட்டாயில் உள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் கூடுவர். பின்னர் அங்கிருந்து தலையில் சாமி கரகம், பூ கரகம், காவடி, வீரபத்திர சாமி கரகம் உள்ளிட்டவைகளை சுமந்து அருகே உள்ள சின்னாற்றில் இறங்கி கங்கா பூஜை செய்து, ஆற்றுநீரை வழிபட்டு கரகம் ஆடி கொண்டாடி வழிபட்டனர். நேற்று அதிகாலை பத்ரகாளியம்மனுக்கு பல்வேறு திரவியங்கள் மற்றும் பூக்களால் அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.