< Back
மாநில செய்திகள்
தேய்பிறை அஷ்டமியையொட்டி  கால பைரவருக்கு சிறப்பு பூஜை
நாமக்கல்
மாநில செய்திகள்

தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜை

தினத்தந்தி
|
21 Jun 2022 6:13 PM GMT

தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜை

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதி சிவன் கோவில்களில் உள்ள காலபைரவருக்கு ஆனி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் அந்தந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசிவிஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், வேலூர் எல்லையம்மன் மற்றும் வல்லப விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்