< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
பர்கூர் அருகேமாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
|31 July 2023 12:30 AM IST
பர்கூர்:
பர்கூர் அடுத்த அம்மேரி கிராமத்தில் உள்ள வீரபத்திர சாமி கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து சென்று பாலபிஷேகம் செய்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து தினசரி அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்று வந்தன. இதனை தொடர்ந்து நேற்று மண்டல பூஜையின் நிறைவு நாளில் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.