< Back
மாநில செய்திகள்
1008 விளக்கு பூஜை
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

1008 விளக்கு பூஜை

தினத்தந்தி
|
8 Dec 2022 8:30 PM IST

1008 விளக்கு பூஜை நடந்தது.


உலக நன்மைக்காகவும், மக்களின் ஆரோக்கியத்திற்காகவும் ராமநாதபுரத்தில் வாசவி கன்னிகா பரமேசுவரி அம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு ஏற்றி வைத்து கும்ப பிரமிடு தீப பூஜை நடைபெற்றது. பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி வழிபட்டனர். அதன்படி 23 முக சர்வ சித்தி விளக்கு, 108 முக அகண்ட விளக்கு, 108 முக வேல் விளக்கு, சுதர்சன சக்கரம், ஸ்ரீ சக்கரம், கும்ப பிரமிடு தீபங்கள், பைரவர் விளக்கு ஆகிய தீபங்கள் ஏற்றப்பட்டன. இந்த அகத்திய தீப பூஜை விளக்குகளில் இருந்தும் உருவாகும் தெய்வீக அலையால் மக்கள் தாங்கள் நினைத்த காரியம் நிறைவேறவும், விவசாயம் தழைத்து செழிக்கவும் மற்றும் கொரோனா போன்ற நோய் தொற்றுகளில் இருந்து விடுபடவும் வழிபிறக்கும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்