திருப்பூர்
அவினாசி கருணாம்பிகையம்மன் கோவில் ராஜகோபுர திருப்பணி தொடக்கம்.
|அவினாசி கருணாம்பிகையம்மன் கோவில் ராஜகோபுர திருப்பணி தொடக்கம்.
சேவூர்
அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில், கருணாம்பிகையம்மன் ராஜகோபுர திருப்பணி தொடக்கத்தை ஒட்டி சிறப்பு பூஜைகள் நேற்று நடைபெற்றது.
கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதும், முதலையுண்ட பாலகனை சுந்தரர் பதிகம் பாட உயிருடன் மீட்டெடுத்த தலமாகவும், கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில், விரைவில் திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கருணாம்பிகையம்மன் கோவில், ஐந்து நிலை ராஜகோபுரம் திருப்பணி தொடக்க விழா சிறப்பு பூஜைகள் நேற்று காலை நடைபெற்றது.கருணாம்பிகையம்மன் ஐந்து நிலை ராஜகோபுரம் திருப்பணி வர்ணம் பூசுதல் நிகழ்வினை, பேரூர் ஆதீனம், கௌமாரமடாலயம் ஆதீனம். திருபொக்கழியூர் ஆதீனம், செஞ்சேரிமலை ஆதீனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திருப்பணியை தொடங்கி வைத்தார்கள்.இதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.