ராமநாதபுரம்
திருவிளக்கு பூஜை
|ருத்ரமாதேவி கோவில் திருவிளக்கு பூஜை நடந்தது.
ராமநாதபுரம் லெட்சுமிபுரம் மேல்கரையில் உதிரகாளி ருத்ரமாதேவி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் ஆடி பிரம்மோற்சவ திருவிழா நேற்றுமுன்தினம் தொடங்கியது. தொடர்ந்து ஆடித்திருவிழாவையொட்டி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். விழாவின் தொடர்ச்சி யாக நேற்று மாலை கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி ருத்ரமாதேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) சங்காபிஷேகமும், நாளை வளையல் சூடுதல் மற்றும் அம்மன் ஊஞ்சலாடுதல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழாவின் நிறைவாக வருகிற 3-ந்தேதி தேதி கரகம், பால்குடம், தீச்சட்டி எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.