< Back
மாநில செய்திகள்
பொன்னியின் செல்வன் கதையில் வரும் இடங்களுக்கு சுற்றுலா - மக்களுக்கு சுற்றுலாத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடு
மாநில செய்திகள்

பொன்னியின் செல்வன் கதையில் வரும் இடங்களுக்கு சுற்றுலா - மக்களுக்கு சுற்றுலாத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடு

தினத்தந்தி
|
22 Aug 2022 6:21 AM IST

வரலாற்றுச் சிறப்புமிக்க பூம்புகாரில் மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று சுற்றுலாத்துறை செயலாளர் சந்திர மோகன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பொன்னியின் செல்வன் கதையில் வரும் இடங்களுக்கு பொதுமக்களை சுற்றுலா அழைத்துச் செல்ல சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறையின் செயலாளர் சந்திர மோகன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பழமையான மிதிவண்டிகளின் கண்காட்சியில் பங்கேற்ற அவர், வரலாற்றுச் சிறப்புமிக்க பூம்புகாரில் மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் சுற்றுலா செல்ல விரும்பும் மக்கள் இதில் பங்கேற்கலாம் என தெரிவித்த அவர், ஒவ்வொரு இடங்களிலும் அதன் சிறப்பை விளக்கும் வகையில் சுற்றுலா வழிகாட்டிகள் உடன் வருவார்கள் என்று கூறினார். மேலும் இது தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்