< Back
தமிழக செய்திகள்

தமிழக செய்திகள்
பொங்கலுக்கான வேட்டி, சேலைகள் டிசம்பரில் வருவாய்த்துறையிடம் ஒப்படைப்பு - அமைச்சர் காந்தி தகவல்

18 Nov 2023 6:48 AM IST
வருவாய்த்துறையிடம் இருந்து பயனாளிகளுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் காந்தி தெரிவித்தார்.
கோவை,
கோவையில் தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை, மத்திய அரசின் ஜவுளித்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கம் நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கின் தொடக்க நிகழ்ச்சியில் தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காந்தி, பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் வேட்டி, சேலைகள் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் வருவாய்த்துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து வருவாய்த்துறையிடம் இருந்து பயனாளிகளுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.