< Back
மாநில செய்திகள்

மாநில செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல் - தமிழ்நாடு அரசு உத்தரவு

18 Jun 2024 5:02 PM IST
மதிய உணவுடன் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை,
பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் மதிய உணவுடன் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி ,சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்படும். இதற்காக ரூ.4.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 43,131 சத்துணவு மையங்களிலும் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.