< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பொங்கல் சிறப்பு பேருந்துகள் தடையின்றி இயக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்
|9 Jan 2024 5:05 PM IST
தேவைப்படும் இடங்களில் தற்காலிக ஓட்டுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
சென்னை,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில் விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சிவசங்கர்,
மக்களுக்கான போக்குவரத்து சேவை தொடர்ந்து கிடைத்து வருகிறது. வேலை நிறுத்தம் நீடித்தாலும், பொதுமக்கள் பாதிக்காத வகையில் பேருந்துகள் இயக்கப்படும். தேவைப்படும் இடங்களில் தற்காலிக ஓட்டுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொங்கல் சிறப்பு பேருந்துகள் தடையின்றி இயக்கப்படும். 6 கோரிக்கைகளில் 4 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என தெரிவித்தார். .