< Back
மாநில செய்திகள்
சென்னையில் பொங்கல் குப்பை 235 டன் அகற்றம் - மெரினா கடற்கரையில் மட்டும் 50 டன்கள் அகற்றம்
மாநில செய்திகள்

சென்னையில் பொங்கல் குப்பை 235 டன் அகற்றம் - மெரினா கடற்கரையில் மட்டும் 50 டன்கள் அகற்றம்

தினத்தந்தி
|
18 Jan 2023 12:04 PM GMT

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் 235 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

சென்னை,

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் 235 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. மெரினா கடற்கரையில் மட்டும் 50 டன்கள் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் காணும் பொங்கல் விழா நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொதுமக்கள் பொழுதுபோக்கு பூங்கா, கடற்கரை, சுற்றுலா தலங்களில் காலை முதலே குவிந்தனர். மெரினா கடற்கரையில் காலை முதலே சாரை சாரையாக மக்கள் வரத் தொடங்கினர். மாலையில் மணல் பகுதியே தெரியாத அளவுக்கு குடும்பத்துடன் மக்கள் குவிந்தனர்.

இந்த நிலையில் கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் திரும்பி செல்லும்போது குப்பைகளை அங்கேயே விட்டுச்சென்றனர். இதனால் கடற்கரை முழுவதும் குப்பைகளாக காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று இரவு முதலே மெரினா கடற்கரையில் குவிந்து இருந்த குப்பைகளை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விடிய விடிய குப்பைகளை அகற்றினர்.

வழக்கமாக சாதாரண நாட்களில் மெரினா கடற்கரையில் 10 டன் குப்பைகள் சேரும். ஆனால் காணும் பொங்கலை யொட்டி இது 5 மடங்காக அதிகரித்து ஒரே நாளில் 50 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்