< Back
மாநில செய்திகள்
விழுப்புரம் அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்று பொங்கல் வைக்கும் விநோத திருவிழா
மாநில செய்திகள்

விழுப்புரம் அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்று பொங்கல் வைக்கும் விநோத திருவிழா

தினத்தந்தி
|
16 Jan 2024 2:22 AM IST

அப்பகுதி ஆண்கள், குளக்கரையில் புதுப்பானையில் பொங்கல் வைத்து சாமிக்கு படையலிட்டு வழிபட்டனர்.

விழுப்புரம்,

தமிழ் மக்களின் கலாசார பண்பாட்டு வரலாற்றில் பொங்கல் பண்டிகைக்கு என்று தனி இடம் உண்டு. இயற்கை தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் மக்கள் தங்கள் நன்றியினை உரித்தாக்கும் விதமாகவே இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

நேற்று அதிகாலையிலேயே பெண்கள் தங்கள் வீடுகளில் பல வண்ண கோலங்களை போட்டு பொங்கல் பண்டிகையை வரவேற்றனர். பிறகு புதுப்பானையில் புத்தரிசியிட்டு சர்க்கரை பொங்கல் வைத்தனர்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்று பொங்கல் வைக்கும் விநோத திருவிழா நடைபெற்றது. நைனார் மண்டபம் பகுதியில் ஆண்டுதோறும் ஆண்கள் மட்டும் பொங்கல் வைப்பது வழக்கம்.

அந்த வகையில், இந்தாண்டு அய்யனார் கோவிலில் கூடிய அப்பகுதி ஆண்கள், குளக்கரையில் புதுப்பானையில் பொங்கல் வைத்து சாமிக்கு படையலிட்டு வழிபட்டனர். மூதாதையர்களின் வழக்கப்படி இவ்வாறு பொங்கலிட்டால் விவசாயம் செழிக்கும் என அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்