பொங்கல் தொடர் விடுமுறை எதிரொலி: வெளியூர்களுக்கு படையெடுக்கும் மக்கள் - ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் நெரிசல்
|பொங்கல் விடுமுறை எதிரொலியாக, செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் சுங்கச்சாவடியில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு,
பொங்கல் விடுமுறை எதிரொலியாக, செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் சுங்கச்சாவடியில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்ல பொதுமக்கள் படையெடுத்துள்ளனர். இதனால், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார்கள், இருசக்கர வாகனங்கள், அரசுப் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் ஊர்ந்து செல்கின்றன.
மேலும், செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் சுங்கச்சாவடியில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஓட்டுனர்கள், பயணிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ள நிலையில், போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெருங்களத்தூரில் சிறப்பு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், வெளியூர் செல்லும் வாகனங்கள் என அனைத்தும் ஆமை வேகத்தில் சென்றதால் ஓட்டுனர்கள் அவதிக்குள்ளாகினர்.