ராமநாதபுரம்
3.96 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு
|ராமநாதபுரத்தில் 3.96 லட்சம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசை கலெக்டர் வழங்கி தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் 3.96 லட்சம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசை கலெக்டர் வழங்கி தொடங்கி வைத்தார்.
பொங்கல் பரிசு
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் அரிசி ரேஷன் கார்டு வைத்துள்ள 3,52,578 பேர் மற்றும் இலங்கை தமிழர்கள் உள்பட மொத்தம் 3,96,403 ரேஷன் கார்டுதாரர்களுக்கு 776 ரேஷன் கடைகள் மூலம் ஒவ்வொரு பயனாளிக்கும் ரொக்கம் ரூ.1000, தலா 1 கிலோ சர்க்கரை மற்றும் பச்சரிசி, முழு கரும்பு கொண்ட பொங்கல் தொகுப்பு பரிசு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் ராமநாதபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் தொடங்கி வைத்தார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளர் சக்தி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், பயிற்சி சப்-கலெக்டர் நாராயண சர்மா, நகர் மன்றத்தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், கூட்டுறவு இணை பதிவாளர் முத்துக்குமார், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் மனோகரன், துணை பதிவாளர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.