< Back
மாநில செய்திகள்
விழுப்புரம் மாவட்டத்தில்6 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்புமுகையூர் ஒன்றியத்தில் கலெக்டர் மோகன் இன்று தொடங்கி வைக்கிறார்
விழுப்புரம்
மாநில செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில்6 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்புமுகையூர் ஒன்றியத்தில் கலெக்டர் மோகன் இன்று தொடங்கி வைக்கிறார்

தினத்தந்தி
|
9 Jan 2023 12:15 AM IST

விழுப்புரம் மாவட்டத்தில் 6 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முகையூர் ஒன்றியத்தில் கலெக்டர் மோகன் இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை இன்று(திங்கட்கிழமை) வழங்கி திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் பொங்கல்பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் 6 லட்சத்து 15 ஆயிரத்து 20 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கும் தொடக்க நிகழ்ச்சி திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி முகையூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஒதியத்தூரில் இன்று காலை 9.15 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து கீழ்வாலை மற்றும் கண்டாச்சிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. இதில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் கலந்துகொண்டு தலா ரூ.1000 மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, சக்கரை, ஒரு முழு நீள கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கி திட்டத்தை தொடங்கி வைக்கிறார். கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் 982 முழு நேர ரேஷன் கடைகள், 245 பகுதி நேர ரேஷன் கடைகள், மகளிர் சுய உதவி குழுவின் மூலம் இயங்கும் 27 முழுநேர ரேஷன் கடைகள் என 1,254 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்