நாமக்கல்
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி
|நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பொங்கல் பரிசு தொகுப்பு
திருச்செங்கோடு தாலுகா கூட்டப்பபள்ளி காலனியில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் கலந்து கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி பேசினார். திருச்செங்கோடு தாலுகாவில் 192 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, நகர தி.மு.க. செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட துணை செயலாளர் மயில்சாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ்பாபு, நெசவாளர் அணி அமைப்பாளர் சரவண முருகன், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நாகர்பள்ளத்தில் நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, எஸ்.என்.டி. ரோட்டில் நகர்மன்ற துணை தலைவர் கார்த்திகேயன், எட்டிமடை புதூரில் நகர்மன்ற உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினர்.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் பகுதியில் உள்ள ரேஷன்கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகர தி.மு.க. செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். தி.மு.க. பிரமுகரும், தொழில் அதிபருமான கண்ணன் கலந்து கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.
வேலூர் பேரூராட்சி தலைவர் லட்சுமி மூர்த்தி, அரசு வக்கீல்கள் பாலகிருஷ்ணன், செந்தில்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுந்தர், நகர அவை தலைவர் மதியழகன், முன்னாள் பேரூராட்சி தலைவர் மாரப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொத்தனூர் பேரூராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். இதில் பேரூராட்சி துணை தலைவர் அன்பரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.