< Back
மாநில செய்திகள்
பொங்கல் பரிசு தொகுப்பு: தமிழர் திருநாளின் மகிழ்ச்சியை கூட்டிடும் - மு.க.ஸ்டாலின்  சமூக வலைதள பதிவு
மாநில செய்திகள்

'பொங்கல் பரிசு தொகுப்பு: தமிழர் திருநாளின் மகிழ்ச்சியை கூட்டிடும் - மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவு

தினத்தந்தி
|
11 Jan 2024 12:12 AM IST

சமத்துவமும், சகோதரத்துவமும் நம் உள்ளங்களிலும், இல்லங்களிலும் பெருகி எங்கும் மகிழ்ச்சியை நிறைக்கட்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது.பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் கொண்டாட ஏதுவாக தமிழக அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் ரூ 1,000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கலுக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ 1,000 ரொக்கம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்தநிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

இல்லங்களில் இன்பம் பொங்கிடும் தமிழர் திருநாளின் மகிழ்ச்சியை கூட்டிடும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை ஆழ்வார்பேட்டையில் தொடங்கி வைத்தேன்.சமத்துவமும், சகோதரத்துவமும் நம் உள்ளங்களிலும், இல்லங்களிலும் பெருகி எங்கும் மகிழ்ச்சியை நிறைக்கட்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்