< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்

பொங்கல் இலவச வேட்டி, சேலை திட்டம் - ரூ.100 கோடி ஒதுக்கீடு

தினத்தந்தி
|
29 Aug 2024 1:58 PM IST

இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

2025 பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ரேசன் கடைகளில் வழங்குவதற்காக 1.77 கோடி சேலை, 1.77 கோடி வேட்டிகள் உற்பத்தி செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பயனாளிகளுக்கு வேட்டி, சேலை கிடைப்பதை விரல் ரேகை பதிவு மூலமாக உறுதி செய்ய வேண்டும். குறிப்பிட்ட கால கெடுவிற்குள் உற்பத்தி செய்து வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு வேட்டி, சேலை வழங்கும் நடைமுறையை கண்காணிக்க வருவாய் துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்