< Back
மாநில செய்திகள்
பொங்கல் பண்டிகை: சென்னை- நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில்
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகை: சென்னை- நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில்

தினத்தந்தி
|
29 Dec 2023 7:37 AM IST

எழும்பூர்- நாகர்கோவில் இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பொங்கல் பண்டிகை மற்றும் தொடா்ந்து வரும் விழாக்களை முன்னிட்டு, பயணிகளின் நலனுக்காகவும், கூட்ட நெரிசலை தடுக்கவும் சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வரும் ஜனவரி மாதம் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) சென்னை எழும்பூரில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் நோக்கி செல்லும் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06067) அதேநாள் மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, வரும் ஜனவரி மாதம் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் செல்லும் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரெயில் (06068) அதேநாள் இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்