< Back
மாநில செய்திகள்
பொங்கல் பண்டிகை: அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்..!
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகை: அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்..!

தினத்தந்தி
|
13 Dec 2023 8:30 AM IST

இணையதளம் வாயிலாகவும், முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் (ஜனவரி) 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 14-ம் தேதி போகி பண்டிகை தொடங்கி, ஜனவரி 15-ம் தேதி பொங்கல், 16-ம் தேதி மாட்டுப்பொங்கல், 17-ந் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட, ஆண்டுதோறும் சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் செல்வது வழக்கம். அதனை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்களுக்கு அரசு விரைவு பேருந்துகளில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. ஜனவரி 13-ல் சொந்த ஊர் செல்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. இணையதளம் அல்லது முன்பதிவு மையங்களில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல ஏதுவாக அரசு விரைவு பேருந்துகள் மட்டுமின்றி சிறப்பு பேருந்துகளை இயக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும் செய்திகள்