< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பொங்கல் பண்டிகை : சொந்த ஊருக்கு விரையும் மக்கள்...!
|12 Jan 2024 7:08 PM IST
வானகரம் சுங்கச்சாவடியில் வாகனகங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நிற்கின்றன.
சென்னை,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை என்பதால், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து பணி நிமித்தமாக சென்னையில் தங்கி இருப்பவர்களும், கல்வி பயில வந்திருக்கும் மாணவர்களும் இன்று முதல் சொந்த ஊர்களுக்கு இன்று முதல் செல்கின்றனர்.
பொங்கலுக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வானங்கள் ஊர்ந்து செல்கின்றன.
மேலும் வானகரம் சுங்கச்சாவடியில் வாகனகங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நிற்கின்றன.