< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பொங்கல் பண்டிகை : சென்னை புறநகர் ரெயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிப்பு
|12 Jan 2024 5:22 PM IST
வரும் 15-ம் தேதி பொங்கல் பண்டிகை அன்று சென்னை புறநகர் ரெயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
சென்னை பெருநகரத்தோடு புறநகர் பகுதி மக்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்தாக இருப்பது மின்சார ரெயில் சேவை. குறைந்த கட்டணத்தில் விரைவான பயணத்தை கொடுப்பதால் அலுவலகம் செல்வோரின் முக்கிய தேர்வாக இது அமைந்துள்ளது. அந்த வகையில், மின்சார ரெயில் சேவையை நாள் தோறும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், வரும் 15-ம் தேதி பொங்கல் பண்டிகை அன்று சென்னை புறநகர் ரெயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்குரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி சென்னை - அரக்கோணம், சூளூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, வேளச்சேரி மார்க்கங்களில் ஞாயிறு அட்டவணைப்படி ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.