காஞ்சிபுரம்
படப்பையில் சமத்துவ பொங்கல் விழா; காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பங்கேற்பு
|படப்பையில் சமத்துவ பொங்கல் விழாவை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது. பள்ளி மாணவ- மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சி விழா, உறியடித்தல், நடன போட்டி உள்ளிட்டவை நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.
இதில் குன்றத்தூர் ஒன்றிய குழு துணை தலைவர் உமா மகேஸ்வரி வந்தே மாதரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவ தினகரன், கண்ணன், படப்பை ஊராட்சி மன்ற தலைவர் கர்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.