< Back
மாநில செய்திகள்
களக்காட்டில் பொங்கல் விழா; ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

களக்காட்டில் பொங்கல் விழா; ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

தினத்தந்தி
|
15 Jan 2023 12:43 AM IST

களக்காட்டில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

களக்காடு:

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. பாளையங்கோட்டை ஒன்றியம் கே.டி.சி.நகர் சமுதாயநலக்கூடம், மூலைக்கரைப்பட்டி பஸ் நிலையம், களக்காடு பஸ் நிலையம் ஆகிய இடங்களில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவுக்கு தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பின்னர் குத்துவிளக்கு ஏற்றி மஞ்சள்குலைகள் மற்றும் கரும்பு தோரணங்கள் கட்டி புதுப்பானையில் பொங்கலிட்டு அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கினார்.

தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணைத்தலைவர்கள் செல்லபாண்டியன், ராஜகோபால், பொதுச்செயலாளர் நம்பித்துரை, மாநில மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் குளோரிந்தாள், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் கனகராஜ், நளன், சங்கரபாண்டியன், கணேசன், ராமஜெயம், மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி தலைவர் பார்வதி மோகன், கீழநத்தம் பஞ்சாயத்து தலைவி அனுராதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

களக்காட்டில் காங்கிரஸ் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன், மாவட்ட துணை தலைவர் சந்திரசேகர், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், நகராட்சி துணை தலைவருமான ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்