< Back
மாநில செய்திகள்
பொங்கல் விழா கொண்டாட்டம்
நாமக்கல்
மாநில செய்திகள்

பொங்கல் விழா கொண்டாட்டம்

தினத்தந்தி
|
18 Jan 2023 1:00 AM IST

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

கைப்பந்து போட்டி

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே தூசூரில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி இளம்புலி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் பெண்களுக்கான கைப்பந்து போட்டி நடந்தது. இதில் சென்னை டாக்டர் சிவந்தி கிளப் அணி, தபால் துறை அணி, ஜி.கே.எம். அணி, கர்நாடகா அணி, கேரளா அல்போன்சா அணி, மதுரை, கோபிசெட்டிபாளையம், சேலம் மாவட்டம் ஆத்தூர் பாரதியார் மேல்நிலைப்பள்ளி அணி உள்ளிட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

இதில் முதல் பரிசான ரூ.25 ஆயிரத்தை கோபிசெட்டிபாளையம் பி.கே.ஆர். கல்லூரி அணியும், 2-வது பரிசு ரூ.20 ஆயிரத்தை சேலம் ஆத்தூர் பாரதியார் அணியும், 3-வது பரிசு ரூ.15 ஆயிரத்தை சென்னை டாக்டர் சிவந்தி கிளப் அணி பெற்றது. போட்டி ஏற்பாடுகளை இளம்புலி ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் கருப்பையா, செயலாளர் அருணகிரி, நிர்வாகிகள் சந்தோஷ், ராம், கனகராஜ், தண்டபாணி ஆகியோர் செய்து இருந்தனர்.

தே.மு.தி.க.

நாமகிரிப்பேட்டை ஒன்றிய தே.மு.தி.க. சார்பில் நடந்த பொங்கல் விழாவில் 300 குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டன. மெட்டாலா பஸ் நிலையம் அருகில் நடந்த விழாவுக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகி செல்வகுமார் வரவேற்றார். மாவட்ட செயலாளர் விஜய் சரவணன் கலந்து கொண்டு பொங்கல் பொருட்கள் வழங்கினார்.

மாநில ஆசிரியர் பட்டதாரி துணைச் செயலாளர் செல்வராஜ், மாவட்ட அவைத் தலைவர் சவுந்தரராஜன், மாவட்ட துணை செயலாளர் சக்திவேல்,, மாநில தொழிற்சங்க பேரவை செல்வராஜ், ராசிபுரம் நகர செயலாளர் இளையராஜா, ஒன்றிய செயலாளர்கள் முருகானந்தம், பாலச்சந்திரன், வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இளவட்ட கல்

திருச்செங்கோடு நெசவாளர் காலனி பகுதியில் நடந்த பொங்கல் விழாவில் இளவட்ட கல் தூக்கும் நிகழ்ச்சி நடந்தது. கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. 3-வது நாள் நிகழ்ச்சியில் 80 கிலோ எடையுள்ள இளவட்ட கல்லை தூக்கும் போட்டியில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு நகராட்சி கவுன்சிலர் ராஜா தலைமை தாங்கினார்.

மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் போட்டிகளை தொடங்கி வைத்தார். ஊர் தலைவர் குணசேகரன் பூஜைகள் செய்தார்.

இளவட்ட கல்லை தூக்கி பிரேம்நாத் முதல் பரிசு பெற்றார். சேசன் 2-வது பரிசையும், கஜா கோபி 3-வது பரிசையும், முத்துக்குமார் ஆறுதல் பரிசும் பெற்றனர்.

நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் மயில்சாமி, வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ்பாபு, நகர செயலாளர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பா.ஜனதா

குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா நகரில் பா.ஜனதா சார்பில் நடந்த பொங்கல் விழாவில் கோலப்போட்டி நடந்தது. சக்தி கேந்திர பொறுப்பாளர் கே.தங்கவேல் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் சண்முகராஜன், மாவட்ட செயலாளர் சுகுமார், நகர தலைவர் கணேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாமரை கோல போட்டி நடந்தது.

இதில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கோலம் போட்டு அசத்தினர். ஆசிரியர் மாதேஸ்வரா தலைமையில் நடுவர் குழு சிறந்த கோலங்களை தேர்ந்தெடுத்து பரிசு வழங்கப்பட்டது. கோலம் போட்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் தலைவர் ராஜூ, பாலாஜி தனசேகர், சண்முகசுந்தரம், சுந்தரராஜ், சேகர், ெஜகதீஸ், சண்முகராஜன், தனசேகர், மணிகண்டன், பிரபு, கங்கேஸ்வரி, சென்னியப்பன், நாகராஜ், ராஜேந்திர பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் ஏழைகளுக்கு வேட்டி- சேலை வழங்கப்பட்டது.

திருச்செங்கோடு நகர பாரதீய ஜனதா சார்பில் நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சி நடந்தது. 108 பேர் பொங்கல் வைத்தனர். நிகழ்ச்சிக்கு நகரதலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் தினேஷ்குமார், மாவட்ட செயலாளர் தீபா, பூங்குழலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்