ராமநாதபுரம்
பொங்கல் விழா கொண்டாட்டம்
|தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தொண்டி,
தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
திருவாடானை யூனியன்
திருவாடானை யூனியன் அலுவலகத்தில் சுகாதார பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. யூனியன் தலைவர் முகமது முக்தார் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் கல்யாண சுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துகிருஷ்ணன், மேகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் யூனியன் அலுவலக வளாகத்தில் 2 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து அலுவலர்களுக்கான பொங்கல் விளையாட்டு விழா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் யூனியன் துணைத்தலைவர் செல்வி பாண்டி, மாவட்ட கவுன்சிலர் காளியம்மாள் மனோகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஓடவயல் சிவ சங்கீதா ராஜாராம், கார்த்திகேயன் ராஜா, ஆலம்பாடி ஜெயசீலா கண்ணன், நம்புதாளை சுமதி முத்துராக்கு, மங்கலகுடி ஜமால்மைதீன், ராவுத்தம்மாள் ராஜதுரை, லூர்து மேரி பிரசாத், காளியம்மாள் குணசேகரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகேசன், கோட்டை ராஜ், விஜி, வன்மீகநாதன், ஜென்சிராணி, மற்றும் யூனியன் அலுவலக அலுவலர்கள், பொறியாளர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொண்டி பேரூராட்சி
தொண்டி பேரூராட்சியில் சுகாதார பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான் தலைமை தாங்கினார். பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான் பொங்கல் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் செயல் அலுவலர் மகாலிங்கம், பேரூராட்சி துணைத்தலைவர் அழகு ராணி ராஜேந்திரன், பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்.எஸ்.மங்கலம்
ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் யூனியன் தலைவர் ராதிகாபிரபு தலைமையில் யூனியன் துணைத்தலைவர் சேகர், ஒன்றிய கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம ஊராட்சி மலைராஜன், ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கான மண்டல அலுவலரும் உதவி செயற்பொறியாளருமான பாபு ஆகியோர் முன்னிலையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. முன்னதாக யூனியன் மேலாளர் அருளப்ப முடியப்ப தாஸ் வரவேற்றார். .விழாவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை இடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) ரவி நன்றி கூறினார்.
ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பேரூராட்சி தலைவர் மவுசூர்யா கேசர்கான் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் மெய்மொழி, பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் முன்னிலையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பேரூராட்சி தலைவர் ஷாஜகான், செயல் அலுவலர் மாலதி ஆகியோர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வயனப் பெருமாள், வார்டு கவுன்சிலர் மோகன்தாஸ் கருப்பண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி பணியாளர் ராஜேஷ் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு பொங்கல் கரும்பு உள்ளிட்ட பொருட்களை பேரூராட்சித் தலைவர் ஷாஜகான் வழங்கினார். விழாவில் வக்கீல் பொன்னுமணி, பேரூராட்சி பணியாளர்கள் சரவணன், குமார், முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.