< Back
மாநில செய்திகள்
பொங்கல் விழா கொண்டாட்டம்
தென்காசி
மாநில செய்திகள்

பொங்கல் விழா கொண்டாட்டம்

தினத்தந்தி
|
15 Jan 2023 12:15 AM IST

கடையம் அருகே ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

கடையம்:

கடையம் அருகே ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தாளாளர் ஐசக் பாக்கியச்சாமி தலைமை தாங்கினார். முதல்வர் மாரிசெல்வி முன்னிலை வகித்தார். வேதியியல் ஆசிரியை பொன் மேரி வரவேற்றார். மாணவ-மாணவிகள் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடத்தினர். மேலும் மாணவ-மாணவிகளின் யோகா, கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. ஆசிரிய-ஆசிரியைகள் மற்றும் பணியாளர்கள் சமத்துவ பொங்கல் வைத்து மாணவர்களுக்கு வழங்கினர். ஆசிரியை பகவதி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்