< Back
மாநில செய்திகள்
புதூர் லூர்து அன்னை ஆலயத்தில் பொங்கல் விழா
மதுரை
மாநில செய்திகள்

புதூர் லூர்து அன்னை ஆலயத்தில் பொங்கல் விழா

தினத்தந்தி
|
2 Oct 2023 1:39 AM IST

புதூர் லூர்து அன்னை ஆலயத்தில் பொங்கல் விழா நடந்தது.

மதுரை கோ.புதூர் புனித லூர்து அன்னை திருத்தலத்தில், கடவுள் செய்த நன்மைக்காக நன்றியறிதல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் நன்றியறிதல் விழா தொடங்கியது. விழாவின் ஒரு பகுதியாக நேற்று பொங்கல் விழா நடைபெற்றது. பங்கு தந்தை ஜார்ஜ் தலைமை தாங்கினார். உதவி பங்கு தந்தையர்கள் பாக்கியராஜ், யூஜின், இம்மானுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பங்கில் உள்ள அனைத்து குடும்பத்தினரும், மாதாவிற்கு பொங்கல் வைத்து நன்றிகடன் செலுத்தினர். அதன்பின்னர், கூட்டு திருப்பலி, மறையுரை நடந்தது. இதுபோல், 8-ந் தேதி "பொன்மயமான ஆலயமே" என்ற தலைப்பில் மறையுரை நிகழ்த்தி பொங்கல் விழா நடைபெற இருக்கிறது. நிறைவாக, வருகிற 11-ந்தேதி (புதன்கிழமை) அன்று மதுரை உயர் மாவட்ட பேராயர் அந்தோணி பாப்பு சாமி தலைமையில் கூட்டுத்திருப்பலி நடத்தப்பட்டு, அந்த நாளை அன்னையின் நாளாக கொண்டாட உள்ளனர்.

மேலும் செய்திகள்