திருநெல்வேலி
மனநலம் பாதிக்கப்பட்டோர் மையத்தில் பொங்கல் விழா; கலெக்டர் விஷ்ணு பங்கேற்பு
|நெல்லை மனநலம் பாதிக்கப்பட்டோர் மையத்தில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கலெக்டர் விஷ்ணு பங்கேற்றார்.
நெல்லை மனநலம் பாதிக்கப்பட்டோர் மையத்தில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கலெக்டர் விஷ்ணு பங்கேற்றார்.
பொங்கல் விழா
நெல்லை டவுன் உழவர் சந்தை வளாகத்தில் உள்ள அரசு ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மீட்பு மற்றும் அவசர சிகிச்சை மையத்தில் நேற்று பொங்கல் விழா நடைபெற்றது.
இதில் கலெக்டர் விஷ்ணு, ஐகிரவுண்டு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி டீன் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் அங்கு தங்கி இருக்கும் மனவளர்ச்சி குன்றியோருடன் சேர்ந்து பொங்கலிட்டு கொண்டாடினார்கள்.
நிகழ்ச்சியில் சோயா சரவணன், பொறுப்பாளர்கள் மாரிமுத்து, ராஜன், அய்யப்பன் தன்னார்வலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
களக்காடு
களக்காடு அருகே கடம்போடுவாழ்வு செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி நிறுவனர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். கல்லூரி பாடல் குழுவினர் இறைவணக்கம் பாடினர். மாணவி தஸ்நேவிஸ் மஞ்சு திருவிவிலியம் வாசித்தார். மாணவி மகேஷ்வரி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக ஞானதிரவியம் எம்.பி., கோவிந்தபேரி மனோ கல்லூரி முதல்வர் பூவலிங்கம் மற்றும் கல்லூரி முதல்வர் குமரேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாணவிகள் புதுப்பானையில் புத்தரிசியிட்டு பொங்கலிட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். மாணவி இசக்கித்தாய் நன்றி கூறினார்.
வள்ளியூர்
வள்ளியூர் யூனியன் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், யூனியன் தலைவருமான சேவியர் செல்வராஜா தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், ஒன்றிய பொறியாளர் செண்பகவள்ளி, சபரிகாந்த், யூனியன் துணை தலைவர் வெங்கடேஷ் தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். யூனியன் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கலிட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். விழாவில் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வள்ளியூர் யூனியன் ஆனைகுளம் பஞ்சாயத்து ஆச்சியூர் முதல் துலுக்கர்பட்டி சாலையில் மயிலாப்புதூர் வரையிலும் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணியினை வள்ளியூர் யூனியன் தலைவரும், வள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான சேவியர் செல்வ ராஜா துவக்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர்கள் ரஹைனா ஜாவித், பிலிப்ஸ், பொன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வள்ளியூர் பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா, தலைவர் ராதா தலைமையில் கொண்டாடப்பட்டது. துணைத்தலைவர் கண்ணன், செயல் அலுவலர் சுஷ்மா, தி.மு.க கிழக்கு மாவட்ட துணை செயலாளர் நம்பி மற்றும் கவுன்சிலர்கள், பேரூராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
பாளையங்கோட்டை
பாளையங்கோட்டை யூனியன் வீரளப்பெருஞ்செல்வி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. புதுக்குளம் ஊராட்சிமன்ற தலைவர் சி.முத்துக்குட்டிபாண்டியன் தலைமை தாங்கி அனைவருக்கும் கரும்பு வழங்கி பொங்கல் வாழ்த்து கூறினார். தலைமை ஆசிரியை ஸ்டெல்லா புஷ்பரஞ்சினி, ஆசிரியர் நெல்லையப்பன், அங்கன்வாடி பணியாளர் ஜெயவைதேகி ஆகியோர் கலந்து கொண்டனர்.