< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகளில் 1.25 லட்சம் பேர் முன்பதிவு
|12 Jan 2024 2:25 PM IST
சென்னையில் இருந்து மட்டும் பல்வேறு ஊர்களுக்கு செல்ல 86,000 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
சென்னை,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தினசரி இயக்கப்படும் 2,100 அரசு விரைவு பேருந்துகளுடன் 4,706 சிறப்பு பேருந்துகளும் சேர்த்து 3 நாட்களுக்கு மொத்தம் 11,006 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. இதேபோல், திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய ஊர்களில் இருந்தும் பிற இடங்களுக்கு 8,478 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இந்த நிலையில் அரசு பேருந்துகளில் செல்ல இதுவரை தமிழ்நாடு முழுவதும் 1.25 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல 86,000 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.