< Back
மாநில செய்திகள்
கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்; சவுமியா அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்; சவுமியா அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு

தினத்தந்தி
|
12 Jan 2023 6:33 PM IST

கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் சவுமியா அன்புமணி ராமதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கீழச்சேரியில் உள்ள கிரைஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு 750 பானைகளில் தமிழர்களின் அடையாளங்களை குறிக்கும் வகையில் கல்லூரி மாணவர்கள் கண் கவரும் ஓவியங்கள் வரைந்து பொங்கல் வைத்து கொண்டாடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பசுமை தாயகம் தொண்டு நிறுவன தலைவர் சவுமியா அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு மாணவர்கள் வரைந்த பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடினார். அப்போது 750 பானைகளில் வண்ண வண்ண ஓவியங்கள் வரைந்து அதில் தமிழர்களின் அடையாளங்களை குறிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்தது. இவை வெர்ட்யூ புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றது.

நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர் ஹாரி வில்லியம்ஸ், முதல்வர் அருள்மணி ஜோசப், துணை முதல்வர் அரவிந்தன், பா.ம.க.நிர்வாகிகள் டாக்டர் பாலா என்கின்ற பாலயோகி, நா.வெங்கடேசன், தினேஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்