< Back
மாநில செய்திகள்
கோரம்பள்ளம் குளம் உடைந்தது - தூத்துக்குடி நகருக்குள் செல்லும் வெள்ளம்...!
மாநில செய்திகள்

கோரம்பள்ளம் குளம் உடைந்தது - தூத்துக்குடி நகருக்குள் செல்லும் வெள்ளம்...!

தினத்தந்தி
|
18 Dec 2023 11:12 AM IST

குளம் உடைந்த நிலையில் வெள்ள நீர் தூத்துக்குடி நகருக்குள் செல்கிறது.

தூத்துக்குடி,

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

இதனிடையே, கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குளங்கள், கால்வாய்கள் நிரம்பி வழிகின்றன.

இந்நிலையில், கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளத்தில் உள்ள குளம் உடைந்தது. இதனால், குளத்தில் இருந்து வெளியேறும் வெள்ளம் தூத்துக்குடி நகர் நோக்கி செல்கிறது. மேலும், கோரம்பள்ளம் அருகே உள்ள கிராமங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

கோரம்பள்ளம் குளம் உடைந்து அதிக அளவில் நீர் வெளியேறி வருவதால் தூத்துக்குடி நகருக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேவேளை கோரம்பள்ளம் குளத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்