< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
பாலித்தீன் பை தயாரித்த தொழிற்சாலைக்கு 'சீல்'
|16 Nov 2022 9:08 PM IST
பாலித்தீன் பை தயாரித்த தொழிற்சாலைக்கு சுகாதாரத்துறையினர் சீல் வைத்தனர்.
திண்டுக்கல்லை அடுத்த நந்தவனப்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் தயாரிக்கப்படுவதாக சுகாதாரத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தொழிற்சாலைக்கு திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் முருகேசன் உள்ளிட்டோர் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
அப்போது ரகசியமாக பாலித்தீன் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு தயாரித்து விற்பனைக்காக வைத்திருந்த 450 கிலோ பாலித்தீன் பைகள், மூலபொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் பாலித்தீன் பை தொழிற்சாலைக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.