சென்னை
நண்பர்களுடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி பாலிடெக்னிக் மாணவன் மாயம்
|நண்பர்களுடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி பாலிடெக்னிக் மாணவன் மாயமானார். அவரை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகிறார்கள்.
சென்னை தண்டையார்பேட்டை, நேரு நகர், மெயின் தெருவைச் சேர்ந்தவர் ஏஜாஸ்(வயது 17). அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர், நேற்று மாலை தன்னுடன் படிக்கும் கிஷோர்குமார், ஜெகதீஷ், மகேஷ்குமார் ஆகியோருடன் காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் கடலில் இறங்கி குளித்தார். நண்பர்கள் அனைவரும் கடலில் குதூகலமாக விளையாடியபடி குளித்து கொண்டிருந்தனர்.
அப்போது கடலில் தோன்றிய ராட்சத அலையில் சிக்கிய ஏஜாஸ் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள், இதுபற்றி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், ராட்சத அலையில் சிக்கி மாயமான மாணவனை மீனவர்கள் உதவியுடன் கடலுக்குள் சென்று தேடி வருகின்றனர். ேமலும் இதுபற்றி காசிமேடு மீன்பிடித்துறைமுகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.