< Back
மாநில செய்திகள்
சுவர் இடிந்து விழுந்து பாலிடெக்னிக் மாணவர் சாவு - பழைய வீட்டை இடிக்கும்போது பரிதாபம்
சென்னை
மாநில செய்திகள்

சுவர் இடிந்து விழுந்து பாலிடெக்னிக் மாணவர் சாவு - பழைய வீட்டை இடிக்கும்போது பரிதாபம்

தினத்தந்தி
|
7 Aug 2022 11:03 AM IST

பழைய வீட்டை இடிக்கும்போது சுவர் இடிந்து விழுந்து பாலிடெக்னிக் மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காஞ்சீபுரத்தை அடுத்த சிறு காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் சுதர்சன் (வயது 17). பாலிடெக்னிக் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர்களது பழைய ஓட்டு வீட்டை இடிக்கும் பணி நடந்தது. வீட்டின் சுவரை சுதர்சன் இடித்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது சுவர் இடிந்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த சுதர்சன், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்துவந்த பாலுசெட்டிசத்திரம் போலீசார் பலியான பாலிடெக்னிக் மாணவர் சுதர்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்