< Back
மாநில செய்திகள்
திருவொற்றியூரில் கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி பாலிடெக்னிக் மாணவர் பலி
சென்னை
மாநில செய்திகள்

திருவொற்றியூரில் கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி பாலிடெக்னிக் மாணவர் பலி

தினத்தந்தி
|
24 Oct 2022 10:14 AM IST

திருவொற்றியூரில் கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பலியானார்.

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்

திருவொற்றியூர் விம்கோ நகர் காந்தி நகரை சேர்ந்தவர் ஐசக். இவருடைய மகன் பால் கிருபாகரன் (வயது 21). இவர், தண்டையார்பேட்டையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர், தன்னுடைய நண்பர் ஜீவா (18) என்பவருடன், தங்களது மற்றொரு நண்பரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் மணலி விரைவு சாலையில் சென்றனர். மோட்டார் சைக்கிளை பால் கிருபாகரன் ஓட்டினார். அவருக்கு பின்னால் ஜீவா அமர்ந்து இருந்தார்.

லாரி சக்கரத்தில் சிக்கி பலி

திருவொற்றியூர் ஜோதி நகர் அருகே சென்றபோது இவர்களுக்கு பின்னால் இருந்து வேகமாக வந்த கன்டெய்னர் லாரி இவர்கள் மீது மோதியது. இதில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் சாலையில் விழுந்த பால் கிருபாகரன், அதே கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். பின்னால் அமர்ந்து இருந்த ஜீவா, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்