< Back
மாநில செய்திகள்
வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை 1500-க்கு மேல் இருந்தால் பிரிக்கப்படும் - கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை 1500-க்கு மேல் இருந்தால் பிரிக்கப்படும் - கலெக்டர் தகவல்

தினத்தந்தி
|
1 Sept 2022 2:22 PM IST

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை 1500-க்கு மேல் இருந்தால் பிரிக்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட வாக்குச்சாவடிகளை மறுசீரமைக்கும் பணி தொடங்கப்படவுள்ளது. இந்த சீரமைக்கும் பணியின் போது கிராமப்புற நகர்புற வாக்குச்சாவடிகளில் வாக்காளர் எண்ணிக்கை அதிகபட்சமாக 1500 வாக்காளர்கள் வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனவே 1,500 வாக்காளர்களர்களுக்கு அதிகமான வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட உள்ளது.

மேலும் தற்போதுள்ள வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டிருந்தாலும் மற்றும் கட்டிடம் சிதலமடைந்திருந்தாலும், 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் வாக்குச்சாவடி அமைந்திருந்தாலும் மாற்றம் செய்யப்பட உள்ளது.

மேற்படி காரணிகளின் அடிப்படையில் துணை கலெக்டர் நிலையிலான அலுவலர்களை கொண்டு வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் மாற்றம் செய்யப்படவுள்ள விவரங்கள் குறித்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் - உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் கடந்த 30-ந்தேதி வெளியிடப்பட்டது.

எனவே, மேற்குறித்த மாற்றங்கள் தொடர்பான கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை வருகிற 6-ந்தேதிக்குள் சம்மந்தப்பட்ட சார் ஆட்சியர்-வருவாய் ஆர்.டி.ஓ., தாசில்தாரிடம் மனுவாக அளிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்