< Back
மாநில செய்திகள்
வாக்குச்சாவடி முகவர்கள் தமிழக அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் விளக்க வேண்டும்  அமைச்சர் முத்துசாமி பேச்சு
ஈரோடு
மாநில செய்திகள்

வாக்குச்சாவடி முகவர்கள் தமிழக அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் விளக்க வேண்டும் அமைச்சர் முத்துசாமி பேச்சு

தினத்தந்தி
|
9 Sept 2023 3:12 AM IST

வாக்குச்சாவடி முகவர்கள் தமிழக அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் விளக்க வேண்டும் என்று அமைச்சர் முத்துசாமி கூறினாா்.

பெருந்துறை தொகுதி வாக்குச் சாவடி நிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம் பெருந்துறையில் நேற்று மாலை நடந்தது. இந்தக்கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு பேசினார். இதேபோல் மொடக்குறிச்சி தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று சிவகிரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சர் முத்துசாமி தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி பேசும்போது, 'வாக்குச்சாவடி முகவர்கள் தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும்' என்றார். அந்தியூர் தொகுதி வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம் அத்தாணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சர் முத்துசாமி தலைமை தாங்கி பேசினார்.

Related Tags :
மேலும் செய்திகள்