கோயம்புத்தூர்
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கிராம உதவியாளர் பணிக்கு 700 பேர் தேர்வு எழுதினர்
|பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கிராம உதவியாளர் பணிக்கு 700 பேர் தேர்வு எழுதினர்.
கிணத்துக்கடவு
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கிராம உதவியாளர் பணிக்கு 700 பேர் தேர்வு எழுதினர்.
கிராம உதவியாளர் தேர்வு
பொள்ளாச்சி தாலுகாவில் 9 கிராம உதவியாளர் பணியிடமும், கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 3 கிராம உதவியாளர் பணியிடமும் காலியாக உள்ளது. இதற்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. பொள்ளாச்சி தாலுகா பகுதியில் உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு உடுமலை சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் 9 காலியிட பணிக்கு 650 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் தேர்வு எழுத 501 பேர் மட்டும் வந்திருந்தனர். 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு 11 மணி வரை நடைபெற்றது. எழுத்து தேர்வை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு மையத்தை பொள்ளாச்சி சப் -கலெக்டர் பிரியங்கா, தாசில்தார் வைரமுத்து ஆகியோர் பார்வையிட்டனர்.
700 பேர்
இதேபோல் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 3 கிராம உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு கிணத்துக்கடவில் கோவை-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு மொத்தம் 141 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் தேர்வு எழுத 109 பேர் மட்டுமே வந்திருந்தனர். தேர்வு மையத்தை துணை கலெக்டர் ரவிச்சந்திரன், கிணத்துக்கடவு தாசில்தார் மல்லிகா ஆகியோர் பார்வையிட்டனர். பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகிய தாலுகாக்களில் மொத்தம் உள்ள 12 கிராம உதவியாளர் பணிக்கு 700 பேர் தேர்வு எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.