திருவாரூர்
திருவாரூரில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
|இந்தி திணிப்பை கண்டித்து திருவாரூரில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தி திணிப்பை கண்டித்து திருவாரூரில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, தி.மு.க. இளைஞரணி-மாணவரணி சார்பில், தமிழகம் முழுவதும் நேற்று ஆா்ப்பாட்டம் நடந்தது. திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், திருவாரூர் எம்.எல்.ஏ.வுமான பூண்டி கே.கலைவாணன் தலைமை தாங்கினார்.
கோஷம் எழுப்பினர்
மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன், மாநில மாணவரணி துணை செயலாளர் சோழராஜன், மாவட்ட துணை செயலாளர் கார்த்திக், நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் தேவா, பொதுக்குழு உறுப்பினர் செந்தில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரஜனிசின்னா உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முன்னதாக இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா வரவேற்றார். முடிவில் மாவட்ட மாணவரணி செயலாளர் அமுதா சேகர் நன்றி கூறினார்.