< Back
மாநில செய்திகள்
காமராஜர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

காமராஜர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

தினத்தந்தி
|
3 Oct 2023 2:17 AM IST

காமராஜர் நினைவு தினத்தையொட்டி நெல்லையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

காங்கிரஸ்-த.மா.கா.

பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன், வக்கீல் அணி இணைத்தலைவர் மகேந்திரன், மேற்கு மாவட்ட பொருளாளர் முரளிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் நெல்லை மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன், கிழக்கு மாவட்ட தலைவர் மாரிதுரை ஆகியோர் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பா.ஜனதா-தே.மு.தி.க.

பா.ஜனதா கட்சியினர் நெல்லை மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் மேயர் புவனேஸ்வரி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் வேல் ஆறுமுகம், முத்துபலவேசம், மாவட்ட செயலாளர்கள் வெங்கடாஜலபதி, நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தே.மு.தி.க.வினர் மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அ.ம.மு.க.-பா.ம.க.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிர்வாகிகள் பேச்சிமுத்து பாண்டியன், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாட்டாளி மக்கள் கட்சியினர் மாவட்ட செயலாளர் சியோன் தங்கராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

சமத்துவ மக்கள் கட்சி

சமத்துவ மக்கள் கட்சியினர் மாநில துணை பொது செயலாளர் சுந்தர் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மாவட்ட செயலாளர் சரத் ஆனந்த், மாணவர் அணி துணை செயலாளர் நட்சத்திர வெற்றி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்திய ஜனநாயக கட்சியினர் மாநில துணை செயலாளர் நெல்லை ஜீவா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சியினர் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சத்யா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொகுதி செயலாளர் மாரிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்தேச தன்னுரிமை கட்சியினர் தலைவர் வியனரசு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

த.ம.மு.க.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் துணை பொதுச்செயலாளர் நெல்லையப்பன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மாவட்ட தலைவர் கண்மணிமாவீரன், மாநகர் மாவட்ட செயலாளர் துரைபாண்டியன், மேற்கு மாவட்ட செயலாளர் நாகராஜசோழன், இளைஞர் அணி செயலாளர் முத்துபாண்டியன் போக்குவரத்து கழக தொழிற்சங்க செயலாளர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் தலைவர் மாரியப்பபாண்டியன் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிர்வாகிகள் தச்சை தங்கவேலு, பால்ராஜ், பேச்சிப்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்து மக்கள் கட்சி

இந்து மக்கள் கட்சியினர் மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நெல்லை சந்திப்பு பெருந்தலைவர் காமராஜர் சிலை பராமரிப்பு குழுவினர் தலைவர் வித்யாகண்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். செயலாளர் சரத்மணி, பொருளாளர் தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சமூக ஆர்வலர் புல்லட்ராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு நாடார் சங்கத்தினர் தென் மண்டல செயலாளர் சேவியர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நாடார் உறவின்முறை சங்கம்

நெல்லை நாடார் உறவின்முறை சங்கத்தினர் தலைவர் அசோகன் நாடார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் ராமச்சந்திரன், துணைத்தலைவர்கள் மகாலிங்கம், அந்தோணி ஜெயபாண்டி, துணை செயலாளர்கள் மனோகர், பாக்யராஜ், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், ஜோசப், ஜான்சன், பாஸ்கர், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாவட்ட துணை செயலாளர் அய்யாசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்