< Back
மாநில செய்திகள்
பெரியாா் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
அரியலூர்
மாநில செய்திகள்

பெரியாா் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

தினத்தந்தி
|
18 Sept 2023 12:01 AM IST

பிறந்த நாளையொட்டி பெரியாா் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தந்தை பெரியாரின் 145-வது பிறந்தநாள் விழா அரியலூர் மாவட்டத்தில் நேற்று சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டது. இதில், ம.தி.மு.க. சார்பில் சின்னப்பா எம்.எல்.ஏ. தலைமையிலான நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். திராவிடர் கழக மாவட்ட செயலாளர் கோபாலகிருட்டிணன் தலைமையில் பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அஸ்தினாபுரம் கந்தசாமி கொடியேற்றினார். விழாவில் பொதுக்குழு உறுப்பினர் செல்லமுத்து, ஒன்றிய தலைவர் சிவக்கொழுந்து உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்