திருநெல்வேலி
காந்தி சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
|காந்தி ஜெயந்தி விழாவையொட்டி, நெல்லையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேசப்பிதா மகாத்மா காந்தி ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை டவுன் சந்திப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள அவரது சிலைக்கு நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில், முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைவர்கள் சுத்தமல்லி முருகேசன், மாரிதுரை ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பா.ஜனதா கட்சியினர் மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தே.மு.தி.க.வினர் மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்திய ஜனநாயக கட்சியினர் மாநில துணை செயலாளர் நெல்லை ஜீவா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். சமத்துவ மக்கள் கட்சியினர் மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மேயர் பி.எம்.சரவணன், ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். சுகாதார அலுவலர் இளங்கோ, கவுன்சிலர் முத்துசுப்பிரமணியன் மற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், தேசிய மாணவர் படையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்பு நெல்லைக்கு வந்த காந்தி, டவுனில் உள்ள கூத்தநயினார் பிள்ளை வீட்டில் தங்கினார். எனவே அங்கு காந்தியின் படம் வைத்து வழிபாடு நடத்தி வருகிறார்கள். காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி, அங்குள்ள காந்தி படத்துக்கு பாரதியார் உலக பொதுச்சேவை மன்ற செயலாளர் கணபதிசுப்பிரமணியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழ் நலக்கழக மாவட்ட செயலாளர் பாப்பாகுடி செல்வமணி, கூத்தநயினார் பிள்ளையின் பேரன் செந்தில், ஜானகிராமன் அந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.