அரியலூர்
போலீஸ்காரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
|போலீஸ்காரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால்(வயது 37). இவர் இரும்புலிக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அகிலா(33). இவர்களுக்கு நடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று புகழேந்தி(7) என்ற மகன் உள்ளான். இவர்கள் குடும்பத்துடன் உடையார்பாளையம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில் அகிலாவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாகவும், இதற்கான சிகிச்சைக்காக டாக்டர்களிடம் காண்பித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் நேற்று முன்தினம் இரவு மீண்டும் அகிலாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து அவர் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை கண்டு புகழேந்தி கதறி அழுதான். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அகிலாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அகிலாவை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.