< Back
மாநில செய்திகள்
விபத்தில் காயம் போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள், செல்போன் திருட்டு: போலீசார் விசாரணை
கரூர்
மாநில செய்திகள்

விபத்தில் காயம் போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள், செல்போன் திருட்டு: போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
8 Sep 2022 5:58 PM GMT

குளித்தலையில் விபத்தில் காயம் போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள், செல்போன் திருடப்பட்டுள்ளது.

சிவகங்கை போலீஸ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 25). போலீஸ்காரான இவர் சம்பவத்தன்று தனது நண்பரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு சிவகங்கையில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். குளித்தலை-மணப்பாறை சாலையில் அய்யர்மலை அருகே சென்றுகொண்டிருந்தபோது ஆடு குறுக்கே வந்ததில் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.பின்னர் அவரே தனது செல்போன் மூலம் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்துள்ளார். அப்போது ஆம்புலன்சிற்கு வழி சொல்வதற்காக அங்கிருந்த ஒருவரிடம் தனது செல்போனை கொடுத்துள்ளார். ‌ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் அவ்வழியே வந்த ஒருவரின் மோட்டார் சைக்கிளில் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த விபத்து தொடர்பாக வழக்கு ஏதும் இவர் குளித்தலை போலீஸ் நிலையத்தில் அளிக்கவில்லை.

வழக்குப்பதிவு

இதையடுத்து விபத்துக்குள்ளான தனது மோட்டார் சைக்கிளையும், செல்போனையும் வாங்கி வருமாறு தனது உறவினிடம் சொல்லி அனுப்பி உள்ளார். ஆனால் விபத்துக்குள்ளான இடத்திலிருந்த இவரது மோட்டார் சைக்கிளை காணவில்லையாம்.அதுபோல இவர் செல்போன் கொடுத்த நபர் யார் என்று தெரியாததால் செல்போனும் மாயமாகியுள்ளது.அதுபோல இவர் செல்போன் கொடுத்த நபர் யார் என்று தெரியாததால் செல்போனும் மாயமாகியுள்ளது. இதுதொடர்பாக அருண்குமார் தனது மோட்டார் சைக்கிளும், செல்போனும் திருடு போனது குறித்து குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்காணிப்பு கேமரா ஆய்வு

இந்தநிலையில் அருண்குமார் விபத்துக்குள்ளான இடத்திற்கு மொபட்டில் (ஸ்கூட்டரில்) ஆண், பெண் இருவர் வந்துள்ளனர். அப்போது அந்த ஆண் விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டும், அந்தப் பெண் மொபாட்டையும் ஓட்டிச் சென்றுள்ளனர்.இந்த காட்சி அப்பகுதியில் உள்ள கடைகளில் இருந்த சி.சி.டிவி கேமராவில் பதிவாகி இருப்பதை கொண்டு அவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்