ஓடும் ரெயிலில் பெண் முன் அமர்ந்து மோசமான செயலில் ஈடுபட்ட காவலர்: வீடியோ எடுத்ததும் ஓட்டம்
|வீடியோ எடுப்பதை கண்ட அந்த நபர், பல்லாவரம் ரெயில் நிலையத்தில் இறங்கி ஓட்டம் பிடித்தார்.
சென்னை,
சென்னை மின்சார ரெயிலில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த பெண் ஒருவர் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது அப்பெண்ணின் முன் நபர் ஒருவர் அமர்ந்துகொண்டு மோசமான செயலில் ஈடுபட்டார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், துணிச்சலுடன் அந்த நபரை வீடியோ எடுத்தார்.
வீடியோ எடுப்பதை கண்ட அந்த நபர், பல்லாவரம் ரெயில் நிலையத்தில் இறங்கி ஓட்டம் பிடித்தார். இது தொடர்பாக கடந்த 14-ந்தேதி அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த தாம்பரம் ரெயில்வே போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தனர். அப்போது தாம்பரம் காவல்நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றிவந்த இரும்புலியூரை சேர்ந்த கருணாகரன், பெண் முன் மோசமான பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, கருணாகரனை கைதுசெய்த தாம்பரம் ரெயில்வே போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். ஓடும் ரெயிலில் பெண்ணிடம் போலீஸ்காரரே சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.