< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
புகாரளிக்க வந்த மூதாட்டியை தள்ளி விட்ட காவலர்: வைரலான வீடியோ - எஸ்.பி எடுத்த அதிரடி நடவடிக்கை
|16 Feb 2023 6:58 PM IST
நாமக்கல் மாவட்டத்தில் புகாரளிக்க வந்த மூதாட்டியை தள்ளி விட்ட விவகாரத்தில், காவலரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே புகார் மனுவை பெற மறுத்து, மூதாட்டியை தள்ளி விட்ட விவகாரத்தில், காவலரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
கண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த அய்யம்மாள் என்ற மூதாட்டி, தனது மகன்கள் சரிவர கவனித்துக் கொள்ளவில்லை எனக் கூறி, பள்ளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முயன்றுள்ளார். அப்போது, அங்கு பணியில் இருந்த காவலர் யுவராஜ், மூதாட்டியிடம் மனுவை வாங்க மறுத்து, அவரை கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்த வீடியோ வெளியாகி வைரலானதையடுத்து, யுவராஜை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.