< Back
மாநில செய்திகள்
போலீஸ்காரர் நண்பருடன் பலி
சேலம்
மாநில செய்திகள்

போலீஸ்காரர் நண்பருடன் பலி

தினத்தந்தி
|
22 Aug 2022 12:56 AM IST

வாழப்பாடி அருகே இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் போலீஸ்காரரும், அவரது நண்பரும் பரிதாபமாக இறந்தனர்.

வாழப்பாடி:-

வாழப்பாடி அருகே இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் போலீஸ்காரரும், அவரது நண்பரும் பரிதாபமாக இறந்தனர்.

போலீஸ்காரர்

வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை ஊராட்சி கீரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவருடைய நண்பரான அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (27) என்பவர் தர்மபுரி காவலர் பயிற்சி பள்ளியில் போலீஸ்காரராக பயிற்சி பெற்று வந்தார்.

இவர்கள் இருவரும் புழுதிக்குட்டை பகுதியில் இருந்து கீரப்பட்டி நோக்கி கடந்த 19-ந் தேதி இரவு 8 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். கீரப்பட்டி சண்முகம் தோட்டத்திற்கு அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த அர்ஜுனன் (26) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது போலீஸ்காரரும், அவரது நண்பரும் சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.

2 பேர் சாவு

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்ட அப்பகுதி பொதுமக்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்று இரவே மணிகண்டன் இறந்தார். இதைத்தொடர்ந்து இவரது நண்பரான போலீஸ்காரர் கிருஷ்ணனும் நேற்று முன்தினம் இரவு இறந்தார். அர்ஜுனன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் போலீஸ்காரர் நண்பருடன் பலியான சம்பவம் இப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்